search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜர் பெடரர்"

    • ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
    • நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாமாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த இரண்டு போட்டியிலும் பட்டம் பெற்றார். பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்றபோது அவர் புதிய வரலாறு படைத்தார். ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி 23-வது கிராண்ட் சிலாமை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.

    பெண்கள் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், இகா ஸ்வியா டெக் (போலந்து), பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெற்றனர்.

    3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 16-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெட்வ தேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    புல் தரை ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியான விம்பிள்டனில் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையை ஜோகோவிச் சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

    நடப்பு சாம்பியனான அவர் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை விம்பிள்டனில் வெற்றி பெற்றார். கொரோனா காரணமாக 2020-ல் போட்டி நடைபெறவில்லை. ஜோகோவிச் 24-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.

    அல்காரஸ் மெட்வதேவ் அவருக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையில் உள்ள இகா ஸ்வியாடெக், ஷபலென்கா, எலினாரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    • சர்வதேச டென்னில் போட்டிகளில் இருந்து சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஓய்வு பெற்றார்.
    • தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் ரோஜர் பெடரர்.

    பெர்ன்:

    சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அண்மையில் ஓய்வு முடிவை அறிவித்தார்.

    20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவருக்கு பல்வேறு நபர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏடிபி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.

    அந்த வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரோஜர் பெடரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் டென்னிஸ் விளையாடுவதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின்போது கிடைத்தது. டென்னிஸ் விளையாட்டில் நீங்கள் ஒரு சிறந்த வீரர். உங்களுடைய வாழ்வில் அடுத்த பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், விராட் கோலியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்ட ரோஜர் பெடரர், நன்றி விராட் கோலி.. விரைவில் இந்தியா வருவேன் எனத் தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு டென்னிஸ் வீரர் பெடரர் நன்றி தெரிவித்தது வைரலாகி வருகிறது.

    • ரோஜர் பெடரர் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்றவர்.
    • தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் ரோஜர் பெடரர்.

    மும்பை:

    2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். 41 வயதான ரோஜர் பெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

    பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற சாதனை படைத்தவர் ரோஜர் பெடரர். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர் ஆவார்.

    இந்நிலையில், ரோஜர் பெடரருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்ன ஒரு அர்ப்பணிப்பு, ரோஜர் பெடரர்.. உங்கள் டென்னிஸ் பிராண்டை நாங்கள் காதலித்தோம். மெல்ல மெல்ல உங்கள் டென்னிஸ் பழக்கமாகிவிட்டது. மேலும் பழக்கவழக்கங்கள் ஒருபோதும் விலகாது, அவை நம்மில் ஒரு பகுதியாக மாறும். அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • 2003ம் ஆண்டு பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
    • அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் 3வது இடத்தில் உள்ளார்.

    சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற ரோஜர் பெடரர், 2022 லேவர் கோப்பைக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    2003ம் ஆண்டு விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றார். அதன் பிறகு அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்தார். 6 ஆஸ்திரேலிய ஓபன், 1 பிரெஞ்ச் ஓபன், 8 விம்பிள்டன் மற்றும் 5 அமெரிக்க ஓபன் என மொத்தம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் தனது முக்கிய போட்டியாளர்களான ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    தனது ஓய்வு முடிவு குறித்து கூறி உள்ள பெடரர், 'கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற கடுமையான சவால்கள் இருந்தன. இதனால் முழுமையான உடற்தகுதியுடன் போட்டிக்கு திரும்ப கடுமையாக உழைத்தேன். ஆனால் என் உடல் திறன் குறித்து எனக்குத்தான் தெரியும்' என்றார்.

    20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ரோஜர் பெடரர் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார். #RogerFederer
    20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் ரோஜர் பெடரர். 20-ல் ஒருமுறை மட்டுமே பிரெஞ்ச் ஓபனை வென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் டென்னிஸ் தொடர்கள் செம்மண் கோர்ட்டில் (Clay Court)  நடைபெறும். புல்தரை கோர்ட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த ரோஜர் பெடரர், செம்மண்ணில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது.

    போட்டி அட்டவணை அதிக அளவில் இருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாட்ரிட் ஓபனில் பங்கேற்கவில்லை. தற்போது பிரெஞ்ச் ஓபனை கருத்தில் கொண்டு மாட்ரிட் ஓபனில் விளையாட முடிவு செய்துள்ளார்.

    இதை உறுதிப்படுத்தியுள்ள மாட்ரிட் ஓபன் தொடருக்கான இயக்குனர் ‘‘பெடரர் எல்லா காலங்களிலும் சிறந்த வீரர்களில் ஒருவர். இதில் எந்த ரகசியமும் இல்லை’’ என்றார். மாட்ரிட் ஓபன் மே 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது.
    ×